பார்வையாளர்கள்

Total Pageviews

Followers

Saturday 10 February 2024

வாழ்க்கைச் சறுக்கு

வீட்டில் இருந்த கடிகாரத்தில் இருந்து ஒரு குருவி ஐந்து முறை வெளியே வந்து எட்டிப்பார்த்துவிட்டு தனது இனிய குரலால், ”குக்கூ, குக்கூ, குக்கூ, குக்கூ, குக்கூ, குக்கூ” என்று கத்திவிட்டு, பறக்க முடியாமல் மீண்டும் அதன் கூட்டுக்குள்ளேயே சென்றுவிட்டது. என் ஒற்றைக்கையால் என் படுக்கையை அழுத்திக்கொண்டே மெதுவாக என் உடலை நிமித்தி கட்டிலில் அமர்ந்தேன். இடுப்புப் பகுதி முழுவதும் மிகவும் வலியும் வேதனையுமாக இருந்தது. எழுந்து நின்று அலுப்பு முறித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும், அப்படிச் செய்வதால் அது எனக்குப் பாதகமாக மாறிவிடும் என்பதை உணர்ந்து அவ்வாறு செய்யாமல் தவிர்த்தேன். 



ஒரு காலத்தில் கல்லூரி படிக்கட்டுகளை இரண்டிரண்டாகத் தாவிச் சென்ற அனுபவங்கள் என் கண் முன்னே வந்து என்னை வேதனைப்படுத்தின. திருமணத்தில் பெரிதளவில் விருப்பம் இல்லாமல் பட்டாம்பூச்சியாய் உலகைச் சுற்றிக்கொண்டு இருந்தேன். “வயதான காலத்தில் உன்னை யார் பார்த்துக்கொள்வார்? நாங்கள் இன்னும் கொஞ்சக் காலம் தான் இருப்போம், அதன் பிறகு நீ தனிமையில் தான் இருந்தாக வேண்டும்.” என்று அடிக்கடி அப்பா அம்மா வற்புறுத்தியதன் பெயரில் இணையேற்பும் இனிதே நிகழ்ந்தது. 

நாங்கள் இருவருமே ஒரே நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தோம். பார்ப்பவர்கள் அனைவரும் எங்களை ஜோடிப்புறாக்கள் என்றே அழைத்தனர். அந்த அளவுக்கு எங்களுடைய ஜோடிப்பொருத்தம் அருமையாக அமைந்திருந்தது. அப்படி அழகாகச் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 

நானும் என் இணையரும் இருசர்க்கர வாகனத்தில் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தோம். எங்கிருந்தோ ஒரு இருசர்க்கர வாகனம் எங்களை முந்திக்கொண்டு செல்லவே, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நான் அவர்களை முந்திச் செல்வதற்காக என் வாகனத்தை வேகமாக முடுக்கினேன். 

“சூர்யா! வேண்டாம்! நாம மெதுவாவே போவோம்!” என்று இணையர் என்னைத் தடுத்தபோதிலும், அந்த இடத்தில் என்னை ஒருவர் முந்திச்சென்று, அதன் மூலம் அவர் அடையும் மகிழ்ச்சி என்னைக் கேவலப்படுத்துவதாக உணர்ந்தேன். கண்ணிமைக்கும் நேரத்தில், என் வாகனம் முந்திச்சென்ற வாகனத்தைத் தாண்டிச் சென்றது. ஆனந்தக்களிப்பில் நான் என் இரண்டு கைகளையும் தூக்கி வானில் அசைத்துக் கொண்டாடினேன். அதன் பின் என்ன நிகழ்ந்தது என்பது எனக்கு நினைவு இல்லை. 

சில மாதங்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்திருக்கிறேன். அதில் இருந்து வெளியே வந்தபோது தான், என் இணையர் என்னை விவாகரத்து செய்துவிட்டதாகவும், என் இரண்டு கால்களும் இனி செயல்படாது என்பதும் எனக்குத் தெரியவந்தது. 

சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என்னால் விலையுயர்ந்த சர்க்கர நாற்காலியை வாங்கச் சில காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால் என்னிடம் இருந்த சில பொருட்களை விற்று ஒரு சாதாரண சர்க்கர நாற்காலியை வாங்கினேன். இப்போது என் கைகளால் அருகில் இருந்த என் சர்க்கர நாற்காலியை மெல்ல பிடித்து, என் உடலைத் திருப்பி அதில் உட்கார முற்பட்டேன். எனக்கிருந்த மனவேதனையை மறந்தாலும், என் உடலை அதனுள் நானே வைக்கும் வலி மிகப்பெரியது. இதை உணரவேண்டும் என்றால், உங்கள் கால்களை மடக்கிக்கொண்டு அருகில் உள்ள நாற்காலியில் உங்கள் உடலைக் கொண்டுசென்று அமர்ந்துபாருங்கள். 

இந்நிலையில், கதிரவனின் வீடு ‘புதுமனைப்புகுவிழா’ அழைப்பிதழ் என் கண்ணில் பட்டது. கதிரவன் என் பால்யகால நண்பன். அவனுடைய வீட்டிற்குச் சென்றாலாவது யாராவது சில மனிதர்களை என்னால் காண முடியும். அப்பா அம்மா மறைந்து இப்போது 3 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, எந்த மனிதர் சஞ்சாரமும் இல்லாமல் வீட்டில் தனியே அமர்ந்துகொண்டு நேரத்தைப் போக்கிக்கொண்டு இருக்கும் எனக்கு இது ஒரு ஆசுவாசமாக இருக்கும். 

ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்து கதிரவனின் வீட்டின் முன் இறங்கினேன். வண்டி ஓட்டிய தம்பி என்னைச் சர்க்கர நாற்காலியில் அமர வைத்து உதவினான். ஒவ்வொரு முறை ஒரு இருக்கையில் இருந்து சர்க்கர நாற்காலிக்கு இடம்மாறும்போதும் சொல்ல முடியாத வேதனை என் இடுப்பில் ஏற்பட்டது. இது ஆயிரம் மின்னல்கள் என் எலும்பினுள் உட்புகுவதைப் போல இருந்தது. 

நல்ல வேளையாக வீட்டு வாசலில் செல்வதற்கு ஒரு சருக்கலான தளம் இருந்தது. அதில் என்னை சர்க்கர நாற்காலியில் வைத்து வாசல் வரை கொண்டுசென்றார்கள். ஆனால், வாசலில் இருந்து உள்ளே செல்வதற்கு இரண்டு பேர் என் சர்க்கர நாற்காலியைத் தூக்கி வைக்க வேண்டியது இருந்தது. தூக்கி வைத்த என் நண்பனுக்கும், மற்ற பிறருக்கும் நிச்சயம் சிரமமாக இருந்திருக்கும். 

அழகான வீடு, ஆனால் என்னால் வீட்டின் தரைதளத்தை மட்டும் தான் பார்க்க முடிந்தது. மேல் மாடிக்குச் செல்ல சறுக்கு இல்லை என்பதால் என்னால் அங்கு சென்று பார்க்க முடியவில்லை. “மாடி அருமையா இருக்கு!” என்று அங்கு சென்றவர்கள் கூறியவற்றைக் காதில் கேட்டேன். 

சிறிது நேரத்தில் அருமையான பிரியாணியும், சுவையான கூட்டும், இனிப்பும் வழங்கப்பட்டது. மகிழ்வோடு அவற்றைச் சாப்பிட்டபோது தான் அடுத்த சிக்கல் தொடங்கியது. வயிற்றினுள் கடுமையான வெப்பம். இது இயற்கையின் அழைப்பு. என் சர்க்கர நாற்காலியைச் சுழற்றிக்கொண்டு கழிவரை வாசல் வரை சென்றுவிட்டேன், ஆனால், கழிவரையினுள் செல்ல மீண்டும் யாரோ என்னைத் தூக்கிவிட வேண்டும். இங்கே சறுக்கு இல்லை. 

- ஜெயசீலன் சாமுவேல்

Tuesday 26 December 2023

வண்ணக் கண்ணாடி

Tuesday 10 October 2023

கண்ணான கண்ணே! என் மீது சாய வா!

 இன்று வானத்தில் நான்கு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தெரியும். இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு அதிசயம்.  பலர் அந்த அதிசயத்தைக் காண கோள் அரங்கங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். வீட்டில் இருந்தபடியே மொட்டைமாடியிலும் பலர் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால், அம்முவின் அம்மா தன் வீட்டு வாசலில் இருந்து கிரகங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் காண்பதற்கு வேறு காரணம் இருந்தது. 

“நான் ஒருமுறை தொப்பு வாங்கிட்டு வந்தப்ப, சனி கிரகத்த சுத்தியும் இப்படித்தான் வளையம் இருக்கும்னு சொன்னா எம் பொண்ணு!” என்று அழுதுகொண்டே கையில் இருந்த கோப்பையில் மது அருந்தினான் முனியப்பன் 

“அந்தப் புள்ள கடைசியா சொன்னதே, ‘குடிய விட்ருப்பா!’னு தான், அவளுக்காகவாவது இந்தக் குடிய விடலாம்ல!” என்றாள் அம்முவின் அம்மா காந்திமதி

“நான் குடிய விட்டா மட்டும் வந்துடுவாளா? அவ இனிமே வரமாட்டா டீ!” என்றான் முனியப்பன்

பல ஆண்டுகளுக்கு முன் அம்மு அவள் அருகே அமர்ந்து ஒரு சந்திர கிரகனத்தைப் பார்த்துக்கொண்டே, “அம்மா, உனக்குத் தெரியுமா பூமிக்கு ஒரே ஒரு நிலா தான், வியாழன் கிரகத்துக்கு 63 நிலா இருக்காம்!” என்றாள்

“63ஆ அடேயப்பா!” என்று ஆச்சரியப்பட்டாள் காந்திமதி

“ஆனா அது உண்மையில்ல!”

“அதான பார்த்தேன்!”

“இல்லம்மா! குறைஞ்சது 95 நிலா இருக்காம், இன்னும் நிறைய நிலா மாதிரி குட்டிகுட்டி கற்கள் அதைச் சுற்றிகிட்டு இருக்காம்!”

“ஆத்தாடி ஆத்தா! நெசமாவா சொல்ற?”

“ஆமாம்மா!” என்றாள் அம்மு

அதை நினைத்து அம்முவின் அம்மா கண்ணில் இப்போது கண்ணீர் வழிந்தது

“நீ வேணா பாரு! இந்தக் குடிய மட்டும் விடு! என் பொண்ணு வந்திடுவா!” என்றாள் காந்திமதி

24 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒருநாள் அம்முவைப் பெண் பார்க்க மாப்பிள்ளைவீட்டார் வந்திருந்தனர். பொண்ணு பத்தாவது முடிச்சிட்டா, பொண்ணோட அப்பா ஊர் ஜமீன் தார் கிட்ட 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஜமீன் தார் மகனுக்கு அம்மு மேல ஒரு கண் இருந்ததால, அந்தக் கடனுக்குப் பதிலா அம்முவ கல்யாணம் பண்ணிக்க பெண் கேட்டு வந்திருந்தாங்க. 

எல்லோருக்கும் இந்த ஏற்பாட்டில் சம்மதம், ஆனால் அம்மு எல்லோரிடமும் ஒன்றை மட்டும் கூறினாள், “நான் இன்னும் படிக்கணும், 2 வருஷம் மட்டும் நான் மேல்படிப்பு படிச்சிடுறேன், பிறகு வேணும்னா கல்யாணம் பண்ணிக்கிறேன்!” என்றாள்

“சரி! அப்போ தட்டையாவது மாத்திக்கலாம்!” என்று ஜமீன் தார் கூறவே தட்டு மாற்றிக்கொண்டனர். 

இப்போது ஜமீன்தாரின் மகனின் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. 

“திரும்பி வர முடியாத இடத்துக்குப் போய்ட்டியே அம்மு!” என்று கதறி அழுதான் முனியப்பன்

“யோவ்! என் பொண்ணு வருவாயா!” என்றாள் காந்திமதி

“2 வருஷம்னு சொன்னா, இன்னையோட 24 வருஷமாச்சு, இனிமே வருவாளா!” என்றான் முனியப்பன்

“நீ வேணா வீட்ல இருக்க சரக்கு பாட்டில எல்லாம் போட்டு ஒடைச்சிடு, என் பொண்ணு வந்துடுவா!” மிகவும் உறுதியாக நம்பினாள் காந்திமதி

“சரி டி! என் பாட்டில் எல்லாம் போட்டு ஒடைச்சிடுறேன், இனிமே குடிக்கவே மாட்டேன்! ஆனா அவ மட்டும் வரல, நீயே எனக்குச் சரக்கு ஊத்தித் தரணும்!” என்றான் முனியப்பன்

“சரியா! பந்தையத்துக்கு ஒத்துக்குறேன்!” என்றாள் காந்திமதி

https://sahanamag.com/kannanakanne-shortstory-je-sa/


Sunday 8 October 2023

Agaanooru: Story 2- Moon light during the season where Vengai flower blossom

 




Place: Kurinji

Subject: Heroine’s girl bestie asking hero to marry heroine

 

Hero and heroine have been in a relationship for some time. Every morning hero visits heroine in her place, after her dad leaves for his homeland security job. They indulge in premarital intimacy. Heroine’s girl bestie helps them meet up everyday and was a mediator for the hero and heroine.

Hero comes from a mountain place.

One fine day, when hero came to visit the heroine, the girl bestie stopped him. “Wait! Where are you going?” she asked. “To meet the heroine!” said the hero.

“You have been coming her for quiet some time now and heroine’s dad came to know about your love affair”

“Oh, no! what happened then?”

“He kept her in house arrest, so you cannot meet her again in daylight anymore, except for one way”

“What is that way? I want to know”

“ha ha! I know you are way too naughty and careless like the mountain monkey I saw”

“Mountain monkey? What did it do?”

“The mountain monkey had its place in the sandal tree covered with pepper twigs, one day ripen banana from a tree fell down into a small hole in the rock. In the same place ripen jackfruit also fell and its juice went into the same pit. Now these two fruit juices mixed and created something that was so sweet and addictive. Not knowing what happened, the monkey drank from the hole, thinking it is water. The taste of the juice mix made the monkey lose control in excitement. It couldn’t climb its sandal tree covered with pepper twigs. So, it went to a flowery bed to relax in joy”

“Wow! What a life that monkey had!” said the hero

“That monkey is from your mountain place. If animals can experience such extreme joy, would you not know, how to get more joy out of the heroine. The only way for you to meet her is during the time Vengai flowers blossom, when the moon comes out at night, at that time, there will be no security to stop you from enjoying your time with the heroine”

“You mean, Vengai flowers, that symbolizes marriage, sure I will marry her” 

Agananooru : Story 1: The word ‘leaving’

 


Place: Palai

Subject: Hero leaving in search of job

Hero and heroine went to a rocky place in a desert like area. Only shade was under a Drumstick tree. Hero sat with his legs outstretched. Heroine kept her head on his lap, and they talked for several hours.

Hero: Hey look at that!

Heroine: Wow! The drumstick flowers just fell on the rock and spread all over it

Hero: It looks like the foam on the ocean bed

Heroine: The weather is too warm here!

Hero: Yes, we belong to Paalai the desert area of Tamil Nadu

Heroine: Yes, too warm indeed

Hero and Heroine made love several times in the shade of drumstick tree.

Hero: Your shoulders look like bamboo, so shiny and smooth!

Heroine: My love! Promise me that you will never leave me

Hero: My lady! I live among the six mountains of Palani hills, it is the place where luxurious jewels were molded into shellac. Once jewels are molded into shellac, they never separate, as such I will never leave you like a jewel in a shellac.

Heroine: Thank you so much darling!

Days passed, and there were no work in the Paalai region. Even the robbers were not interested in the region where hero and heroine lived. So, hero decided to leave to better place in search of livelihood.

Heroine told all these to her female bestie:

“My hero is like Lord Murugan who never loses a feud,

Once my hero fought against great horse riders and overcome, such is his valor and might

He said that my shoulders are like bamboo, shiny and smooth, and that he will never leave me like gems fixed in shellac

Yet, he left me and went through the way in this paalai, where drumstick flowers fall on the rock and scatter like foam in the ocean bed

Not even robbers will come in that path”


 

சூப் கதைகள் - காதல் ஒரு பூ மாதிரி

ரமேஷ் தனது கையில் இருந்த ரோஜாப்பூவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து கீழே போட்டான். வீட்டில் ஓட்டிக்கொண்டிருந்த திரைப்படத்தில், “காதல் ஒரு பூ மாதிரி, ஒருமுறை அது உதிர்ந்திட்டா, திரும்பவும் ஒட்டவைக்க முடியாது” என்று சூப்பர்ஸ்டார் வசனம் பேசிக்கொண்டு இருந்தார். அவனுடைய கண்கள் குளமாகின. அந்தப் படத்தில் வரும் நாயகனைப் போலவே தானும் இனிமேல் வாழ்க்கை முழுவதும் தன்னந்தனியாகவே இருந்துவிட வேண்டும் என்று முடிவு செய்தான். திடீரென அவனுடைய ஃபோன் ஒலித்தது, “போகாதே! போகாதே!” என்கிற ஒரு ரிங்டோன். பக்கிப்பயபுள்ள அதுக்குள்ள சோக ரிங்க்டோன் செட் பண்ணிட்டான். ரமேஷ் ஃபோனை அட்டெண்ட் செய்தான். ”ஹலோ! ஹலோ” எதிர்முனையில் பேசிய அருணுடைய குரலில் ஏதோ பதட்டம் தென்பட்டது. “ஹலோ! சொல்லுடா!” என்றான் “மச்சி, சீக்கிரம் பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரிக்கு வா! நம்ம ஃப்ரெண்ட் வினோத் தூக்க மாத்திர சாப்டுட்டான்” என்றான் அருண் ரமேஷ் பேண்ட் சர்ட்டை மாட்டிங்கொண்டு கிளம்பினான். “இதெல்லாம் எங்க உருப்புடப்போவுது!” என்று அப்பா சலித்துக்கொண்டார் “ ரமேஷ், வினோத், அருண், கயல்விழி உள்ளிட்ட 60 பேர் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். நேற்றைய தினம் கயல்விழியின் திருமணம். ரமேஷ், அருண் இருவரும் மருத்துவமனையைச் சென்றடைந்தனர். மற்ற நண்பர்களும் விரைவில் வந்து சேர்ந்தனர். பெற்றோர் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தனர். “இவன் சரியான லூசு மச்சி, சூப்பர்ஸ்டார் எப்பவோ சொன்ன “காதல் ஒருமுறை தான் பூக்கும்” டயலாக்க வெச்சிகிட்டு இவன் படுத்துற பாடு!” என்றான் அருண் “அது உண்மை தான மச்சி” என்றான் ரமேஷ் “ம்க்கும், புதுசா தலைவர் நடிச்ச படம் பார்க்கலையா? அதெல்லாம் கம் வெச்சி ஒட்டிக்கலாம்!” என்றான் அருண் “அடப்பாவமே, இது எப்போ!” “நேத்து சாயங்காலம் தான் ரிலீஸ் ஆனுச்சு!” “நம்ம சர்க்கிள்லயே ஹரிஹரன் தான் பெஸ்ட்டு” “ஏன் மச்சி?” “ஹரிஹரன் ரொம்ப நாளா கயல்விழிக்கு ரூட் விட்டுட்டு இருந்தான். நேத்து கயல்விழிக்கும் ஹரிஹரனுக்கும் கல்யாணம் ஆகிருச்சு!” “இல்லையே மச்சி, கயல்விழிக்கும் வேற யாருக்கோவும்ல கல்யாணம் ஆனுச்சு” “ஆமாம், கயல்விழி வேற ஒருத்தன கட்டிகிட்டா, ஹரிஹரன் வேற ஒருத்திய கட்டிகிட்டான், ஆனா ரெண்டுபேருக்கும் நேத்து தான் தனித்தனியா கல்யாணம் நடந்துச்சு” என்றான் அருண். மருத்துவர் வெளியே வந்தார், “ஒரு பிரச்சனையும் இல்ல, கொஞ்ச நாளா தூக்கம் வரலைனு டாக்டர் கிட்ட தூக்க மாத்திரை கேட்டிருக்கார். அவரும் 2 தூக்க மாத்திரை மட்டும் வாங்கிக்க எழுதி கொடுத்திருக்கார். அதுல அரை தூக்கமாத்திரைய சாப்பிட்டுட்டு தூங்கிருக்கார்! காலைல தூக்கம் தெளிஞ்சதும் கூட்டிட்டுப் போங்க, இல்ல இப்பவே கூட்டிட்டுப் போனாலும் சரிதான்!” என்றிருக்கிறார். பக்கத்துக் கட்டிலில் எக்ப்திய பிரமிடுகளில் அடைக்கப்பட்டிருந்த மம்மி ஒன்று மல்லாக்கப் படுக்கப்போடபப்ட்டிருந்தது. “ஐயோ! டாக்டர்” என்று பதறினார்கள் ரமேஷும் அருணும். “இவர் நேத்து யாரோ ஒருத்தங்க கல்யாணத்துல போய் ”அடிடா அவள, மிதி டா அவள, வெட்றா அவள, தேவையே இல்ல”னு பாடிருக்காரு, கல்யாண வீட்டுக்கு வந்தவங்க வெளுத்துவிட்டதுல உடம்பெல்லாம் காயம், அதான் இப்படி சுத்தி வெச்சிருக்கோம்!” என்றார் டாக்டர். அடுத்த நாள் காலை செய்தி அறிக்கையில், “நேற்று இரவு 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தனித்தனியே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணை ஒருதலைப்பட்சமாக சுமார் 50 தனித்தனி பக்கங்களாகக் காதலித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு நேற்று அமெரிக்கா மாப்பிளையுடன் திருமணமானதை ஒட்டி, இவர்கள் 50 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், மேலும் சிலர் சாராயக்கடையை ஒரு மாதகாலம் குத்தகைக்கு எடுத்து இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து அந்தப் பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்!” என்று வாசிக்கப்பட்டது.

அப்புறம் எதுவும் விசேஷம் உண்டா?

 


அன்னாள் வேலைக்குப் புறப்பட்டுக்கொண்டு இருந்தாள். அப்போது மொபைல் ஃபோன் ஒலித்தது.

ஹலோ! அன்னாள்! நான் யோகோசீமோ பேசுறேன், இன்னக்கி சாயங்காலம் எங்க வீட்டுல ’கேக் கட்டிங்’ இருக்கு மறக்காம வந்திடு!”

! சரி கண்டிப்பா வரேன்!”

என் மூத்த மகனுக்குப் பிறந்தநாள், அதான். ’கேக் கட்டிங்’ வெச்சிருக்கோம்!”

நிச்சயமா வந்திடுறேன்!”

ஃபோனைக் கட் செய்தவுடன், அடுத்த அழைப்பு வந்தது

ஹலோ! நான் மிக்சே பேசுறேன்,  நீ வீட்ல எப்போ இருப்ப அன்னாள்?”

ஹாய் மிக்சே, சாயங்காலம் இருப்பேன், என்ன விஷயம்?”

எல்லாம் நல்ல விஷயம் தான், என் மகளுக்கு அடுத்த மாசம் கல்யாணம் முடிவாகி இருக்கு, அதான் பத்திரிக்கை வைச்சிட்டுப் போகலாம்னு கேட்டேன்”

! வாழ்த்துகள் சாயங்காலம் 4 மணிக்கு எல்கானாவும் வீட்ல இருப்பாங்க, நிச்சயம் வாங்க!”  

சாயங்காலம் 4 மணி...

மிக்சே அன்னாளையும், எல்கானாவையும் சந்திக்க வீட்டிற்கு வந்தனர். அவர்கள் திருமண அழைப்பிதழை வைத்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். கடைசியாக வெளியே செல்லும் முன்பாக

“நீங்க எப்போ நல்ல செய்தி சொல்லப் போறீங்க?” என்றாள்

ஒன்றும் சொல்லாமல் அன்னாள் மிக்சேயைப் பார்த்தாள்.

பாதாம், பிஸ்தா எல்லாம் தினமும் சாப்பிடுங்க, எல்லாம் சரியாகிடும்!” என்று கூறிவிட்டு மிக்சே கிளம்பினார்.

எல்கானாவும், அன்னாளும் யோகோசீமோவின் வீட்டிற்குப் புறப்பட்டனர். கேக் கட்டிங் முடிந்து அனைவரும் கேக் சாப்பிட்டுவிட்டு கிஃப்ட் கொடுத்துவிட்டுச் சென்றனர். “அன்னாள், எல்கானா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று யோகோசீமோவும் யோகிஹாமாவும் கூறினார்கள்.

நீங்க ஏன் ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கக் கூடாது! எவ்வளவு நாள் இப்படியே இருப்பீங்க!” என்று கேட்டனர்.

அன்னாளும் எல்கானாவும் மௌனமாக இருந்தனர்.  

பழைய ஏற்பாட்டில் இருக்கும் அன்னாள் கதையை அவளிடம் சொல்லாத கிறிஸ்தவ நண்பர்களோ உறவினர்களோ கிடையாது. உண்மையில் தன் தாயாருக்கும் இவ்வாறான கதைகள் சொல்லப்பட்டன. “ஒரு ஆண் மகனைக் கொடுத்தால் ஊழியத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்!” என்று பிரார்த்தனை செய்த பின்பு தான், பெண் பிள்ளையாக அன்னாள் வந்து பிறந்திருந்தாள். பெண்ணாகப் பிறந்ததால் பாஸ்டராக வேண்டிய அவசியம் அன்னாளுக்கு இருக்கிறதா இல்லையா என்று சில காலம் அன்னாளின் அம்மாவும் குழம்பிப்போய் இருந்தார். பிறகு தெய்வகுத்தம் ஆகிவிடக்கூடாது என்று அன்னாளை ஒரு ஊழிய ஸ்தாபனத்தில் சேர்த்துவிட்டனர். அவளுடைய கணவர் எல்கானாவும் ஒரு ஊழிய ஸ்தாபனத்தில் தான் வேலை செய்து வருகின்றனர்.

இரவு அன்னாளும் எல்கானாவும் தேனீர் அருந்த அமர்ந்தனர்.

ஏங்க, அன்னாள்-சாமுவேல் கதை பைபிள்ல இருக்கில்ல, அது பற்றி என்ன நினைக்கிறீங்க?”

தினமும் அந்தக் கதைய தான் யாராவது சொல்றாங்க, ஒருவேள அன்னாளுக்கு ஆண் பிள்ளை பிறக்காம இருந்தா என்ன ஆகி இருக்கும்னு யோசிக்கிறேன்!”

ம்ம்ம், எனக்கு என்னன்னா, அன்னாள்-சாமுவேல் ஒரு பக்கம் இருக்கட்டும், அன்னாளோட மனச கஷ்டப்படுத்தினாங்கல்ல, அவங்கள பற்றி ஏன் எங்கயும் பிரசங்கம் பண்ண மாட்டேங்குறாங்க?”

பண்ணலாம், ஆனா நம்ம சமுதாயத்துக்கு அடுத்தவங்க கிட்ட ஏதாவது கேட்டுகிட்டே இருக்கணும். பிறந்ததும் ‘ஆணா பொண்ணா’னு தொடங்கி, எந்த ஸ்கூல்ல படிக்கிற, எந்தக் கம்பெனில வேலைசெய்ற, எப்போ கல்யாணம், வீட்ல என்ன விசேஷம்னு கேட்டுப் பழகிட்டாங்க. ஒரு வகையில அதைக் கேட்குறதுக்காவது 2 பேர் இருக்காங்களேனு நினைக்கிறேன். இன்னொரு பக்கம் அதுவே ரொம்ப மன அழுத்தத்த கொடுக்குது”

நீங்க சொல்றது சரி, நாம நல்லா இருக்கணும்னு தான் அவங்க இவ்ளோ சொல்றாங்க, அது ஒரு கட்டத்துக்கு மேல ரொம்ப மன உழைச்சல ஏற்படுத்துது. போன வாரம் 13 வயசு பொண்ணு ஒருத்தி என்னைய பார்த்து, ’என்ன அக்கா அடுத்த மாசம் நீங்க கண்டிப்பா மாசமாகி இருக்கணும்’னு சொல்லிட்டுப் போறா, அவளுக்கு இதையெல்லாம் பற்றி என்ன தெரியும்?”

அவளாவது சின்ன பொண்ணு. பலர் கல்யாண வீட்லயும், பிறந்தநாள் விசேஷங்கள்லயும் அடுத்து உங்க வீட்டு விசேஷம் தான்னு சொல்றாங்க. நமக்கு ஏன் குழந்தை இல்ல, நம்ம என்ன மாதிரி மனப்போராட்டத்த சந்திச்சிகிட்டு இருக்கோம்னு அவங்களுக்குப் புரியிறது இல்ல. இந்த பூமியில ஒரு யோவான் ஸ்நானகனோ, ஒரு தெபோராளோ குழந்தை  பெற்றுக்காட்டியும் அவங்களோட மதிப்ப இழக்கல. அது அன்னாளை வசைபாடியவர்களுக்கும், குழந்தை இல்லா தம்பதியரை மனம் வருந்தும்படி பேசுறவங்களும் புரிஞ்சிக்கிற காலம் வரும், அதுவரைக்கும் நாம இதை எல்லாம் கடந்துபோக வேண்டியதா இருக்கு”

சில நேரங்கள்ல எங்கயாவது கண்காணாத இடத்துக்குப் போயிடலாம்னு தோனுது!”

நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.” (எபேசியர் 1:4) அப்படினு வசனம் சொல்லுது, அப்படினா உலகம் உருவாகுறதுக்கு முன்னாடியே கடவுள் நம்மல தேர்ந்தெடுத்துட்டார். நமக்குக் குழந்தைகள் இருந்தாலும் இல்லாட்டியும், நம்மை அவரோட பிள்ளைகளா தேர்ந்தெடுத்து இருக்கார்.” என்று எல்கானா கூறினார். இருவரும் அமர்ந்து வானத்தில் நிலவுக்கு அருகே வெள்ளி கிரகம் தெரிவதைப் பார்த்து இறைவனின் படைப்பை வியந்தனர்.



நிம்மதி உங்கள் சாய்ஸ்

 


எனக்கு வியர்த்து கொட்டியது, நெஞ்சின் அருகே ஏதோ ஒரு வலி இருந்தது. சற்று மயக்கமாகவும் இருந்தது. என்னை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். சிறிது நேரத்தில் எனக்கு வலி முற்றிலுமாக நீங்கிவிட்டது. எனக்கு முன்பாக என் உறவினர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். என்னுடைய மகனும் இருந்தான். சரியான உதவாக்கரை, ஒன்றுக்கும் உதவாதவன், சொல்பேச்சி கேட்காதவன். என் வாழ்க்கை கட்டுரையில் அவன் ஒரு பிழை என்றே கூறவேண்டும்.

ஆனால் நான் தான் நலமடைந்துவிட்டேனே இவர்கள் ஏன் அழவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், அப்போது என் தலையின் வலது பக்கத்தில் ஒரு சுழல் காற்று போல ஒரு ஒளி உண்டானது. ஒருவேளை நான் இறந்துவிட்டேனா என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. நான் மேலே சென்றேன், அங்கே ஒருவர் பெரிய தாடியோடு, ஒரு பெரிய வெள்ளை அங்கி அணிந்து அமர்ந்து இருந்தார். எனக்கு முன்பாக பிரபல ரவுடி ஒருவர், ஒரு மத போதகர், ஒரு கடத்தல்காரர் இன்னும் சிலர் நின்றுகொண்டு இருந்தனர். அவர்களில் சிலர் மேலேயும் சிலர் கீழேயும் சென்றனர். மேலே சென்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், கீழே சென்றவர்கள் சற்று சோகமாகவும் இருந்தார்கள். பிரபல ரவுடிகளும், சில தீயவர்களும் மேலே செல்வதை கண்டு நான் அச்சரியம் அடைந்தேன்.

பிறகு என் பெயரை வாசித்தார்கள், “உத்தமன், உத்தமன், உத்தமன் !

நான் தான் ஐயா !என்றேன்.

நீங்கள் நரகத்துக்குச் செல்ல வேண்டும் !என்றார் அந்த வெள்ளை அங்கி அணிந்தவர்.

நான் ஏன் செல்ல வேண்டும் நான் அந்த ரவுடியைவிடவும் நல்லவன் தானேஎன்றேன்.

அப்போது அந்த வெள்ளை அங்கி அணிந்தவர் ஒரு பட்டியலை எடுத்து என்னிடம் காட்டினார், அதில் என்னுடைய மனைவி, மகள், பேரன், மற்றும் என்னுடைய மகன் மற்றும் மருமகளின் பெயர்கள் இருந்தன

இவர்களுடன் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா?” என்று அவர் என்னிடம் கேட்டார்

என்னுடைய மனைவி, மகள் மற்றும் பேரனுடன் நான் வாழ விரும்புகிறேன், ஆனால் என்னுடைய மகன் ஒரு துரோகி அவனோடு நான் வாழ விரும்பவில்லைஎன்றேன் நான்.

அப்போது அந்த வெள்ளை அங்கி தரித்தவர்,

உங்கள் உறவினர்கள் இன்னும் மரிக்கவில்லை, அவர்கள் இறந்த பிறகு சொர்கத்திற்கு செல்வார்களா அல்லது நரகத்துக்கு செல்வார்களா என்பது தெரியும்.

ஆனால் இந்த எண்ணத்தோடு நீங்கள் இருந்தால் நரகத்தில் அவர்களை சந்திக்கும்போது சண்டை போட்டுக்கொள்ளலாம், சொர்கத்தில் யாரும் சண்டை போடுவதை நாங்கள் அனுமதிப்பது இல்லை.

சொர்கத்திற்கு சென்ற அந்த ரவுடி, மதபோதகர் மற்றும் சிலர் தங்கள் எதிரிகளை முற்றிலுமாக மன்னித்துவிட்டார்கள்.

உங்கள் உறவினர்களை மன்னிப்பதா இல்லையா என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள் !என்றார்.

யாரோ என்னுடைய நெஞ்சிலே குத்தியதைப்போல் இருந்தது, என்னை சுற்றிலும் மின்னல் அடித்தது.

நான் என் கண்களை திறந்தேன், மருத்துவர் என்னை பார்த்து, “இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கில்என்றார்

Serpent

 

           Jeeva’s college was near farmland. Once while Jeeva was going to college by bus, a snake was seen crossing the road. The snake must have been at least 1 meter in length and brownish in color. Snakes were always considered an enemy by Jeeva. Though Jeeva’s parents belonged to the village, Jeeva did not have much opportunity to know about snakes and their behaviors. Jeeva studied in convent schools and their friends either considered snakes as a bad omen or as a representative of Satan. Jeeva’s father was working in a cotton mill and his mother was a homemaker. So, nothing much was discussed about Snakes, except that they are poisonous. 

           So, Jeeva decided to kill the snakes in those fields with the help of churchmates Bala and Guna. The next day the trio went in search of snakes in order to kill them. The villagers stopped them and called Jeeva’s uncle. 

           Jeeva’s uncle came to the spot and apologized to the villagers and took the three friends with him. On their way back, Unchurched Uncle asked why they did it.

Throughout the Bible, it is clearly explained Serpent is the Satan, so we decided to kill them said the three. 

“Are you sure guys!” asked Uncle 

“Sure Uncle, ever since it cheated Eve in the Garden of Eden, till the book of revelation, Serpent was considered a cunning beast”

“Well, there is also a verse that Jesus should be lifted up like the serpent was lifted in the desert, have you heard of it?”

“Yes Uncle, but that was one exception”

“Guys, there are a lot of things written in the bible as figures of speech, you cannot take them literally” explained uncle

“So, what was the serpent in the Book of Genesis and the Book of Revelation” The kids were curious

“The first story in the book of Genesis is an illustration rather than a reality, snake in the Adam and Eve story was an allegory for the King of Babylon, whose emblem was a snake”

“What uncle, do you mean Adam and Eve were not real people?”

“Adam means the land, and Eve means the source of life, they represent the country of Israel. And the snake represents the king of Babylon as you know. These were stories plagiarized from the pagans of Africa. Everybody had their version of the creation story. Some kept ‘Snake’ as a figurative representation of the ‘womb’ of a woman” said Unchurched Uncle 

“Uncle, if Adam and Eve story itself is an allegory, how do we interpret the rest of the history?”

“I would advise you to search history yourself, or join a theology class from a reputed institution” 

“Ok uncle, then explain the ‘old serpent’ thing in the book of Revelation” 

“Old serpent, what do you understand from this?” asked Uncle 

“Old serpent means the Serpent that was cursed by God in the book of Genesis”

“No, no, no. Old here does not denote ‘past’, here ‘old’ represent the age. In the Book of Revelation, they were writing about the trials and tribulations faced by Christians of that time, Once again ‘Nero’ was the old (aged) serpent they were referring to, not the literal serpent” 

666

 

Jeeva sat in one corner of the house totally disturbed. Jeeva prayed earnestly to God as tears dropped down their eyes.  

“What happened Jeeva!,” asked aunt

“Yesterday, they gave the roll numbers for the upcoming semester exam,” said Jeeva

“Wow! You are crying over a roll number, I never cried even for exam results” said aunt

“Even if you flunked?” asked Jeeva

“No, aunt never flunks in Exam, I was the class topper,” said aunt

“Oh, that’s why!” sighed Jeeva 

“Ok, let it be. But why would one cry over a roll number?” curiously Aunt asked

“Look at this, I am scared!” Jeeva showed the roll number to aunt 

Aunt saw the roll number, and you guessed it right, it was 666. The aunt said it was only a roll number and nothing to worry about it. Jeeva being over-spiritual could not take a number associated with Satan as a roll number for upcoming exams. So, Jeeva cried again and aunt left Jeeva alone to cry. 

Unchurched uncle is a part-time stock market trader. He completed certain trades in the stock market and came out of his room. He saw Jeeva crying and inquired about the scenario. 

When Jeeva showed the roll number, he just laughed and said that there is nothing in it to be scared. But Jeeva wouldn’t stop.  

So, Unchurched uncle asked Jeeva about different numbers that would make Jeeva frightened. Jeeva thought for a moment and said, number 13, number 666. No other number came to Jeeva’s mind. 

Unchurched uncle asked why Jeeva was afraid of the number 13. Jeeva said it was due to the movie series ‘Friday the 13th’. Unchurched uncle was very thankful that Jeeva did not show yet another bible verse for being afraid of a number. 

“So, what do you think of the number 616?” asked Unchurched Uncle

“What do I think? nothing. Even my phone number ends with 616” said Jeeva 

“Oh, great! That gives me a reason to be scared of you” said Uncle 

“What? Why what’s so scary about the number 616?” 

“To be frank, the verse that makes Christians scarred was supposed to have 616 instead of 666, it was a mistranslation”

“This is news to me uncle, you mean Bible has mistranslations”

“Hell, yes! 616 was the original number” reassured Uncle 

“No, I won’t believe it!”

“Ok, back to history class. In the first century, Christians were prosecuted by many rules of that time, one of the prominent among them was Nero Cesar, he was so cruel, and he was mentioned as a Beast in the bible”

“So, the beast in the bible is not about Satan?” 

“We will discuss that sometime later, but Nero Cesar was the beast mentioned in Revelation whose number was given as 666 as per the Greek translations”

“So, 

you said 616”

“Yes, 616 was the number found in some of the earliest manuscripts found, known as Papyrus 115, instead of the long believed 666”

“Now I have a new number to be scared off”

“Haha, so you are scared of a dead ruler, Nero Cesar?”

Jeeva smiled…